/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்கம்பம் சாய்ந்து 10 நாட்களாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி
/
மின்கம்பம் சாய்ந்து 10 நாட்களாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி
மின்கம்பம் சாய்ந்து 10 நாட்களாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி
மின்கம்பம் சாய்ந்து 10 நாட்களாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி
ADDED : செப் 08, 2024 04:54 AM
கம்பம்: தோட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பம் சேமடைந்துள்ளதால் 10 நாட்களாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வேளாண் பணிகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது.
மின்வினியோகத்திற்கு டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் அமைத்து சப்ளை வழங்கப்படுகிறது. இதில் பழுது ஏற்பட்டால் மின் சப்ளை துண்டித்தால் விவசாய பணிகள் நடைபெறாது .
கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்லும் வீரப்பன் குளத்து பாதை வாய்க்கால் அருகே மின்கம்பம் ஒன்று சாய்ந்து தோட்டத்திற்குள் விழுந்துள்ளது.
மின்கம்பம் விழுந்து 10 நாட்களை கடந்தும், அதனை சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்டவர்களின் தோட்டங்களில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் பயிர்கள் வாடி வருகிறது. விவசாயிகள் மின்வாரிய பணியாளர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக சுருளிப்பட்டி உதவி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்டதற்கு, மின்கம்பம் சாய்ந்தது தொடர்பாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது .
நேற்று காலை மின் கம்பத்தை சீரமைப்பு பணியை துவக்கி உள்ளோம் என்றார்.
மின்கம்பம் சாய்ந்ததால் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.