/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரெக்கை கட்டி பறக்கும் ஏலக்காய் விலை; ஒரு மாதத்தில் கிலோ ரூ.2300 ஆக உயர்வு
/
ரெக்கை கட்டி பறக்கும் ஏலக்காய் விலை; ஒரு மாதத்தில் கிலோ ரூ.2300 ஆக உயர்வு
ரெக்கை கட்டி பறக்கும் ஏலக்காய் விலை; ஒரு மாதத்தில் கிலோ ரூ.2300 ஆக உயர்வு
ரெக்கை கட்டி பறக்கும் ஏலக்காய் விலை; ஒரு மாதத்தில் கிலோ ரூ.2300 ஆக உயர்வு
ADDED : மே 01, 2024 08:02 AM
கம்பம் : ஏலக்காய் விலை ஒரே மாதத்தில் கிலோவிற்கு ரூ.ஆயிரம் வரை உயர்ந்துள்ளதால் மீண்டும் உச்சத்தை தொடும் நிலைக்கு செல்கிறது.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி கேரளாவில் அதிக பரப்பில் மேற்கொள்ளபடுகிறது. கர்நாடகா, தமிழகத்தில் கணிசமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஏலக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். உரம், பூச்சி மருந்து விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு ஒரு புறமும், மழை கிடைக்காமல் மகசூல் பாதிப்பு மறுபுறமும் என விவசாயிகளை கலங்கடிக்கிறது.
இந்த சீசனில் மகசூல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேவையான அளவு மழை பெய்யவில்லை. காய்கள் உதிர்ந்தது, நூற்புழு தாக்குதல், அழுகல் நோய் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காய் பறிப்பு 7 சுற்றுக்களாக இருக்கும். ஒரு சுற்று காய் பறித்த பின் 50 நாட்கள் கழித்து அடுத்த சுற்று பறிப்பார்கள்.
தற்போது கிலோ ரூ. 2300 வரை விலை உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை சராசரி விலை கிலோ ரூ. 1200 தான் கிடைத்தது .
தற்போது ஏலக்காய் விலை உயர்வு ரெக்கை கட்டி பறக்கிறது. தொடர்ந்து மழை இல்லாததாலும், கடும் வெப்பம் நிலவுவதாலும் உற்பத்தி பாதிப்பு கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே ஆகஸ்டில் சீசன் துவங்கும். இல்லையென்றால் சீசன் தள்ளி போகும். எனவே,இந்த விலை ஏற்றம் என்கின்றனர்.
இது தொடர்பாக மார்க்கெட்டிங் நிபுணர்கள் கூறுகையில், .இந்த சீசனில் மழை இல்லாததால், மகசூல் பாதிப்பு கடுமையாக இருக்கும். ஏலக்காய் போதிய அளவு வரத்து இருக்காது.
எனவே தீபாவளி, தசாரா பண்டிகை உள்ளிட்ட விேஷசங்களை எதிர்நோக்கி வியாபாரிகள் ஏலக்காய் கொள்முதல் செய்து இருப்பு வைக்கின்றனர். இந்த விலை உயர்வு தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர். விலை உயர்ந்த போதும், தோட்டங்களில் காய் இல்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.