/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாரல் மழையால் பன்னீர் திராட்சை விலை குறைவு
/
சாரல் மழையால் பன்னீர் திராட்சை விலை குறைவு
ADDED : மே 19, 2024 05:27 AM
கம்பம் : தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பன்னீர் திராட்சையின் விலை குறைந்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. பன்னீர் திராட்சை பெரும்பாலான கிராமங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சை ஓடைப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சை மஹாராஷ்டிராவில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது.
மஹாராஷ்டிராவில் இருந்து விதையில்லா திராட்சை டிசம்பர் கடைசியில் வரத்து துவங்கும். டிசம்பர் இறுதியில் ஆரம்பமாகும் திராட்சை வரத்து ஏப்ரல், மே வரை மட்டுமே இருக்கும். விதையில்லா திராட்சை வரத்து உள்ள காலங்களில் கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடியாகும் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்காது. விதையில்லா திராட்சை வரத்து நின்றவுடன், பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்க துவங்கும்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பன்னீர் திராட்சை கிலோ ரூ.60 க்கு மேல் விலை கிடைத்தது. ஆனால் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விலை இறங்குமுகமாக உள்ளது. கிலோவிற்கு ரூ.20 வரை குறைந்து தற்போது கிலோ ரூ.40 ஆக உள்ளது.
திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், பன்னீர் திராட்சை தொடர் மழை காரணமாக விலை குறைய துவங்கி உள்ளது .இது வழக்கமானது தான். இந்தாண்டு மழை, வெயில் அதிகமாக இருந்ததால் மகசூல் பாதிப்பு உள்ளது. எனவே வரத்தும் குறைவாகவே உள்ளது. விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

