/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் குறைந்தது மழை நீர்மட்டம் 136 அடியாக உயர்வதில் சிக்கல்

ADDED : ஆக 02, 2024 08:23 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழை குறைந்ததால் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நீர்மட்டம் 4 அடிவரை உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 131.55 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி).
இந்நிலையில் நேற்று மழை குறைந்தது. பெரியாறில் 8.4 மி.மீ., தேக்கடியில் 4.2 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2483 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5059 மில்லியன் கன அடியாகும்.
கனமழையால் நீர்மட்டம் 136 அடியை எட்டும் என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். தற்போது மழை குறைந்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 126 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.