/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக் பூட்டும் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறியது
/
டாஸ்மாக் பூட்டும் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறியது
ADDED : செப் 01, 2024 06:15 AM

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடைக்கு பூட்டுபோடும் போராட்டம் நடந்த இருந்த தமிழ் புலிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.
பெரியகுளம் அருகே வடுகபட்டி தென்னந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை என போர்டு வைக்காமல் கடை எண்: '8625' ஆக.26ல் திறக்கப்பட்டது. இதற்கு அந்தப்பகுதி தோட்டத்துக்காரர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் பாலா, பெண்கள் விடுதலை கழகம் ஒருங்கிணைப்பாளர் தமிழரசி ஆகியோர் டாஸ்மாக் கடையை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி வந்தனர்.
தென்கரை இன்ஸ் பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையில் போலீசார் டாஸ்மாக் கடைக்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்து அழைத்து செல்ல அரசு டவுன்பஸ் தயார் நிலையில் நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தமிழ் புலிகள் கட்சியினர் மதுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கிளம்பினர். இதனால் கைது நடவடிக்கை இல்லை.-