ADDED : செப் 08, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 37. இவரது மனைவி ஈஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
தானும் இறக்கப்போகிறேன் என சின்னச்சாமி வேதனைப்பட்டுள்ளார். இவரது தாயார் கருப்பாயி 58. சின்னச்சாமிக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் வீட்டில் சின்னச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--