/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊதியம் முறையாக வழங்குவதில்லை வனத்துறை தற்காலிக ஊழியர்கள் அவதி
/
ஊதியம் முறையாக வழங்குவதில்லை வனத்துறை தற்காலிக ஊழியர்கள் அவதி
ஊதியம் முறையாக வழங்குவதில்லை வனத்துறை தற்காலிக ஊழியர்கள் அவதி
ஊதியம் முறையாக வழங்குவதில்லை வனத்துறை தற்காலிக ஊழியர்கள் அவதி
ADDED : செப் 08, 2024 04:55 AM
மூணாறு: மூணாறு டி.எப்.ஓ. அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் வனத்துறை தற்காலிக ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வாங்குவதில்லை என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மூணாறு டி.எப்.ஓ. அலுவலகத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் காட்டு யானை தடுப்பு பிரிவினர் உள்பட பலர் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களாக தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத நிலையில், தற்போது ஒரு மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. மாதம் தோறும் முறையாக ஊதியம் வழங்காததால் குழந்தைகளில் கல்வி கட்டணம் உள்பட அன்றாட குடும்ப செலவை கூட கவனிக்க இயலாத அளவில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை கடன் வாங்கி சமாளிப்பதால் பல ஊழியர்கள் கடன் சுமையில் தத்தளிக்கின்றனர்.
நிதி பற்றாக்குறையால் ஊதியம் முறையாக வழங்க இயலவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
உயிரை பொருட்படுத்தாமல் பணி செய்யும் வனத்துறை தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் முடங்காமல் மாதம் தோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.