/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொன்ற பசுவின் இறைச்சியை தின்பதற்கு வந்த மூன்று புலிகள் தொழிலாளர்கள் அச்சம்

ADDED : ஏப் 27, 2024 05:08 AM
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் கொன்ற பசுவை தேடி மூன்று புலிகள் வந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் தொழிலாளி சசிகுமாரின் கறவை பசுவை அவர் கண்முன் ஏப்.23ல் கொன்றது. தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே பசுவை கொன்றதால் அதன் இறைச்சியை புலியால் தின்ன இயலவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இறந்த பசுவின் உடலை சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தி புதைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது சமீப தேயிலை தோட்டத்தில் மூன்று புலிகள் ஒன்றாக நடமாடின. அவை ஏற்கனவே கொன்ற பசுவை தேடி வந்ததாக கருதப்படுகிறது. புலிகள் நடமாடியதை நேரில் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக புலிகளின் நடமாட்டத்தை நேரில் பார்த்த போதும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்கவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ முன்வராமல் வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அடுத்து அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு புலிகளை பிடிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.