/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் நீர் திறப்பு 900 கன அடியாக அதிகரிப்பு 132 அடியை எட்டியது நீர்மட்டம்

ADDED : செப் 14, 2024 11:02 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியதைத் தொடர்ந்து, தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 132 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 811 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5165 மில்லியன் கன அடி.
நீர்ப் பிடிப்பு பகுதியில் மழைக்கான அறிகுறி இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. இதனால் தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக திறக்கப்பட்டிருந்த 800 கன அடி நீர், நேற்று காலையில் இருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மின் உற்பத்தி அதிகரிப்பு
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் 72 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 81 மெகாவாட்டாக அதிகரித்தது.