/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை துண்டானது
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை துண்டானது
ADDED : மே 04, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் வலது கை அறுந்து தொங்கியது.
அங்கு நேற்று முன்தினம் இரவு 'ஷிப்ட்'டில் பணிக்கு வந்த தொழிலாளி ஜெயகுமார் 46, நேற்று காலை பணி முடிய சிறிது நேரம் இருந்தது. இந்நிலையில் ஜெயகுமாரின் வலது கை நேற்று அதிகாலை 5:45 மணிக்கு இயந்திரத்தில் சிக்கி அறுந்து தொங்கியது. அவரை, உடனிருந்த தொழிலாளிகள் மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து எர்ணாகுளம் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.