/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே பகுதியில் புலி, செந்நாய் கூட்டம் பார்த்ததால் தொழிலாளர்கள் கலக்கம்
/
ஒரே பகுதியில் புலி, செந்நாய் கூட்டம் பார்த்ததால் தொழிலாளர்கள் கலக்கம்
ஒரே பகுதியில் புலி, செந்நாய் கூட்டம் பார்த்ததால் தொழிலாளர்கள் கலக்கம்
ஒரே பகுதியில் புலி, செந்நாய் கூட்டம் பார்த்ததால் தொழிலாளர்கள் கலக்கம்
ADDED : செப் 17, 2024 04:41 AM
மூணாறு : மூணாறு அருகே ஒரே பகுதியில் இரண்டு மணி நேரம் இடைவெளியில் செந்நாய்கள், புலி ஆகியவற்றை பார்த்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
மூணாறு பகுதியில் காட்டு யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. அவற்றால் மனிதர்கள், கால்நடைகள் என பாரபட்சம் இன்றி உயிர் பலிகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் பீதியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது செந்நாய்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 11ல் செப் 14ல் தொழிலாளர்கள் கண் முன் மூன்று செந்நாய்கள் கேளையாட்டை வேட்டையாடி தின்றது. அந்த நாய்கள் அதே பகுதியில் தேயிலைத் தோட்டத்தினுள் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு பாறையில் படுத்து இருந்தன. அதனை அந்த வழியில் சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர்.
அதே பகுதியில் இரவு 7:30 மணிக்கு மூணாறில் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் வேறொரு பாறையில் புலி படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பகுதியில் இரண்டு மணி நேரம் இடைவெளியில் செந்நாய், புலி ஆகியவற்றை பார்த்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

