/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உசிலம்பட்டியில் தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம்
/
உசிலம்பட்டியில் தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம்
உசிலம்பட்டியில் தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம்
உசிலம்பட்டியில் தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம்
ADDED : மார் 30, 2024 04:21 AM
உசிலம்பட்டி : தேனி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி செல்லம்பட்டி ஒன்றிய பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், நீதிபதி, தவசி, பா.பி., கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். திருமங்கலம் விலக்கு அருகே பிரசாரத்தை துவக்கி சிந்துபட்டி, திடியன், செல்லம்பட்டி, கருமாத்துார், விக்கிரமங்கலம் பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தனர்.
உதயகுமார் பேசுகையில், '' தி.மு.க., வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன், பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் தினகரன் இருவருமே அ.தி.மு.க., வில் இருந்து சென்றவர்கள். அவர்களை பார்த்தாலே மக்களுக்கு இரட்டை இலை சின்னம்தான் ஞாபகம் வரும்'' என்றார்.
வேட்பாளர் நாராயணசாமி பேசுகையில், ''அ.தி.மு.க., சாமானியர்களுக்கான கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே சாமானியர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பார்கள். அதேபோல் பழனிசாமியும் சாதாரண தொண்டனான எனக்கு 'சீட்' கொடுத்து ஜெயித்து வா என அனுப்பியுள்ளார். பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தவும், அதன் மூலம் இந்தப்பகுதியில் விவசாயத்திற்காக கூடுதல் தண்ணீர் கிடைக்கவும் முயற்சி மேற்கொள்வேன்'' என்றார். என பேசினார்.

