/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐ.டி., நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி; தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

ADDED : ஜூலை 01, 2024 06:06 AM
தேனி : தேனியில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக்கூறி, ஐ.டி., நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உத்தமபாளையம் பாலசந்திரன் வீட்டில் இருந்தவாறு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் இன்ஸ்டாகிராம் செயலி பயன்படுத்தினார். அதில், பங்கு சந்தை முதலீடு தொடர்பான விளம்பரத்தை பார்த்து பயிற்சியில் சேர்ந்தார். இதற்காக ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்தார். அதில் எந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் தினசரி மதிப்பு கூடும் எனக் கூறினர். இதனை ஆன்லைனிலும் சரிபார்த்தார். தொடர்ந்து முதலீடு செய்ய தொடர்பு கொண்டார். அதன் பின் மற்றொரு குழுவில் பாலசந்திரனை சேர்த்தனர். தொடர்நது 'Retail Home' என்ற செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறினர். அதில் கணக்கு துவங்கிய பாலசந்திரன் ரூ. 11 லட்சத்தை முதலீடு செய்ததில் ரூ.31 ஆயிரம் லாபமாக கிடைத்தது. பின் அந்த செயலி முடங்கியது. வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் இல்லை. இதனால் தான் பாதிக்கப்பட்டதை உணர்ந்த ஐ.டி.,நிறுவன ஊழியர் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.