/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப் பொருள் கடத்தலுக்கு டிரைவர்கள் துணை நிற்காதீர்கள் தேனி டி.எஸ்.பி., அறிவுரை

ADDED : ஜூலை 04, 2024 02:08 AM

தேனி: 'போதை பொருட்கள் கடத்தலுக்கு ஆட்டோ டிரைவர்கள் துணை நிற்க வேண்டாம்' என, ஆட்டோ டிரைவர்களுக்கு தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் அறிவுரை வழங்கினார்.
தேனியில் நகர் போலீசார் சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். தேனி இன்ஸ்பெக்டர் உதயக்குமார், டிராபிக் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.ஐ.,க்கள் கருப்பசாமி, தவசிராஜன், மணிமாறன், ஜீவனாந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., பேசுகையில்,
கஞ்சா, புகையிலை, சட்டவிரோத மதுபாட்டில் கடத்துபவர்களுக்கு உங்கள் ஆட்டோவில் இடம் அளிக்காதீர்கள்.
அவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் எங்களிடம் தகவல் கூறுங்கள். சுய ஒழுக்கமாக உள்ள ஆட்டோக்காரர்கள் மீது, பொது மக்கள் மரியாதை அளிப்பர். அதனால் உங்கள் தொழில் வளர்ச்சி அடையும்.
தேனியில் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலில் ஆட்டோக்கள் சிக்கினால் ஒரு போதும் மீண்டும் ஆட்டோக்களை மீட்க முடியாது.' என்றார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., போதை பொருள் தடுப்பு உறுதிமொழி வாசிக்க ஆட்டோ டிரைவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.