/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழுதான பேட்டரி கார், ஸ்டீல் கட்டில்கள் வீணாகும் நிலை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி அவலம்

ADDED : ஆக 08, 2024 05:51 AM

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பழுதான பேட்டரி கார் உரிய காலத்தில் பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் துருப்பிடித்து 'காய்லாங்' கடைக்கு செல்லும் நிலையில் உள்ளது.
இம்மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நேயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். முதியோர், நடக்க இயலாத நோயாளிகளை மருத்துவக் கல்லுாரி முகப்புப் பகுதியில் இருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லவும், பிறதுறைகள் செல்ல பேட்டரி கார்கள் வசதி செய்யப்பட்டது. தற்போது அதில் ஒன்று மட்டுமே இயங்குகிறது.
மற்றொரு பேட்டரி கார் டயர்'களில் காற்று இல்லாமல் பூமியில் புதைந்து பராமரிப்பு இன்றி துருப்பிடித்து வீணாகும் நிலையில் ஒருங்கிணைந்த பணிமுனை முன் நிறுத்தப்பட்டு உள்ளது.
இம் மருத்துவமனையில் உள் நோயாளிகள் வருகை அதிகரிப்பால் வார்டுகளில் படுக்கை வசதி இன்றி தரையிலும், ஒரு கட்டிலில் இருவர் என சிகிச்சை பெறும் அவலம் நீடிக்கிறது. ஆனால் சேதமடைந்த ஸ்டீல் கட்டில்கள் பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் வெயில் மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகிறது.
இந்த ஸ்டீல் கட்டில்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது பழைய இரும்புக்கு ஏலம் விட வேண்டும். அதேபோல் பேட்டரி காரை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.