/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி சாரல் சில்க்ஸ் அண்டுரெடிமேட்ஸ் திறப்பு விழா
/
தேனி சாரல் சில்க்ஸ் அண்டுரெடிமேட்ஸ் திறப்பு விழா
ADDED : செப் 04, 2024 01:12 AM

தேனி : தேனி மதுரை ரோட்டில் தேனி சாரல் சில்க்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் ஷோரூமை நடிகர் ஜீவா திறந்து வைத்தார்.
ஷோரூமின் உரிமையாளர்கள் சங்கீதா சரவணன், விஜயலட்சுமி கோபிநாத் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்வில் வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், அ.தி.மு.க., தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி நகர துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், ஹேமாவதி எத்திராஜ், நகர தொழில் உரிமையாளர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ஏற்ற ஆடைகள் தரமானதாகவும் சரியான விலையில் பல்வேறு டிசைன்கள் உள்ளன.
மூன்று தளங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தேனி சாரல் சில்க்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் உரிமையாளர்கள் கோபிநாத், சரவணன் செய்திருந்தனர்.