/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி விளையாட்டு விடுதி மாணவர்கள் அணி சாம்பியன்
/
தேனி விளையாட்டு விடுதி மாணவர்கள் அணி சாம்பியன்
ADDED : ஜூலை 11, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தென்காசி மாவட்டம் கடையத்தில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் தேனி விளையாட்டு விடுதி 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் அணி பங்கேற்றது.
போட்டியில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் தேனி விளையாட்டு விடுதி மாணவர்கள் அணி, வி.கே.,புரம் செயின்ட்மேரிஸ் அணிகள் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் தேனி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், கால்பந்து பயிற்சியாளர் பாண்டீஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.