/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இன்றி தாகத்தில் தவிக்கும் பயணிகள்

ADDED : ஏப் 10, 2024 06:17 AM
போடி : தமிழக, கேரளா பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் அமைந்துள்ளது. போடியில் இருந்து தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, மூணாறு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் வந்துசெல்கின்றன.
தினந்தோறும் ஏராளமான பயணிகள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பங்குனி கோயில் திருவிழாவும் துவங்கி உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் ரூ. பல ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.
சில நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது.
குடிநீர் வசதி இல்லாததினால் குழந்தை முதல் பெரியோர் வரை குடிநீர் தாகத்தை போக்கிட அருகே உள்ள ஓட்டல்கள், பிளாட்பார கடைகளில் நாடி செல்லும் நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பயணிகளின் தாகத்தை போக்கிட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது தற்காலிகமாக குடிநீர் வசதி அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.