ADDED : ஏப் 29, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் எஸ்.எஸ்.ஐ., பாரதிமுருகன் பெரியகுளம் ரோடு எஸ்.என்.ஆர்., சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அவ்வழியாக டூவீலரில் வந்த தேவதானப்பட்டி தெற்கு தெரு ஜீவராஜ் 31, முத்தையா 21, கிருஷ்ணபாண்டி 23, ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.

