/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைமாஸ்விளக்கு எரியாததால் இருளில் தவிக்கும் மூன்றாந்தல்
/
ஹைமாஸ்விளக்கு எரியாததால் இருளில் தவிக்கும் மூன்றாந்தல்
ஹைமாஸ்விளக்கு எரியாததால் இருளில் தவிக்கும் மூன்றாந்தல்
ஹைமாஸ்விளக்கு எரியாததால் இருளில் தவிக்கும் மூன்றாந்தல்
ADDED : செப் 10, 2024 06:12 AM

பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் நகரின் முக்கிய பகுதி இருளில் தவிக்கிறது.
பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய பகுதியாகும். இங்கிருந்து பெரியகுளம் வழியாக
திண்டுக்கல், திருச்சி மார்க்கமாகவும், தேனி, போடி, சின்னமனூர் கம்பம் மார்க்கமாக கேரளா செல்லும் ஏராளமான பஸ்கள், லாரி, கார், வேன் என பல்வேறு வாகனங்கள் மூன்றாந்தல் காந்தி சிலை வழியாக சென்று வருகிறது.
பஜார் வீதியாக உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இப் பகுதியை கடந்து செல்கின்றனர். முக்கியத்துவமான இந்தப்பகுதியில் காந்தி சிலை அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த பல நாட்களாக எரிவதில்லை.
கடைகளின் விளக்கு வெளிச்சத்தால் இருள் இன்றி இரவு 9 மணிவரை பளிச் என இருக்கும். கடைகள் மூடினால் அப் பகுதி இருள் சூழ்ந்து விடுகிறது. அதன்பின் அப்பகுதியில் அச்சமான சூழல் நிலவுகிறது.
பல்வேறு சமூக அமைப்புகள் நகராட்சி நிர்வாகத்திடம் ஹைமாஸ் விளக்கு எரிவதற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இருட்டை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.--

