/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புலிகள் நடமாட்டம்: வனத்துறை 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
/
புலிகள் நடமாட்டம்: வனத்துறை 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
புலிகள் நடமாட்டம்: வனத்துறை 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
புலிகள் நடமாட்டம்: வனத்துறை 'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
ADDED : ஏப் 28, 2024 04:22 AM
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் நடமாடிய மூன்று புலிகளை கண்காணிப்பதற்கு வனத்துறை ஒன்பது பேர் கொண்ட சிறப்பு குழுவை நியமித்தது.
அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சசிகுமாரின் கறவை பசுவை அவர் கண் எதிரே ஏப்.23ல் புலி கொன்றது. இறைச்சியை தின்ன இயலாமல் புலி திரும்பியதால் மறு நாள் மேலும் இரண்டு புலிகளுடன் இறைச்சியை தேடி வந்தது. தேயிலை தோட்டத்தில் நடமாடியதை தொழிலாளர்கள் உள்பட பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பு
அப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடமாடும் புலிகளை கண்காணிப்பதற்கு ஒன்பது பேர் கொண்ட குழுவை வனத்துறை நியமித்தது. அக்குழு கண்காணித்த போதும் புலிகளின் நடமாட்டத்தை காண இயலவில்லை. அக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.