/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டைம்பாம்' வெடிகுண்டு வழக்கு மதுரை நபருக்கு 'ஆயுள்'
/
'டைம்பாம்' வெடிகுண்டு வழக்கு மதுரை நபருக்கு 'ஆயுள்'
'டைம்பாம்' வெடிகுண்டு வழக்கு மதுரை நபருக்கு 'ஆயுள்'
'டைம்பாம்' வெடிகுண்டு வழக்கு மதுரை நபருக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 24, 2024 01:55 AM

தேனி:தேனி, பாண்டிகோவில் தெரு சிவக்குமார், 44, கடந்த 2012 செப்., 29ல் கம்பம் ரோடு டாஸ்மாக் கடை அருகே குண்டு வெடித்து, இவரது சட்டையில் தீப்பற்றியது.
போலீஸ் அதிகாரிகள், மோப்ப நாய் பிரிவினர், வெடிபொருள் தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில், 9 வோல்ட் நிப்போ பேட்டரிகள், கலர் ஒயர்கள், செம்பு பீஸ் ஒயர்கள், சர்க்யூட் சிம் உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றி, வெடித்தது டைம் பாம் வகை வெடிகுண்டு என, உறுதி செய்தனர்.
விசாரணையில், போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான இமாம் அலியின், 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது ஆதரவாளர்களால் டைம் பாம் வெடிகுண்டு வைக்கப்பட்டது தெரியவந்தது. வழக்கு சி.பி.சி.ஐ.டி., புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
கடந்த, 2015 மார்ச் 21ல் மேலுார் முபாரக் என்பவரின் காலணிகள் விற்கும் கடையில் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரித்தார்.
இதில், முபாரக், உமர்பாருக் என்பவரிடம் வெடிப்பொருட்களை வாங்கி டைம் பாம் தயாரித்து பல இடங்களில் வெடிக்கச் செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அவர்களை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மன்னர் மைதீன் என்பவரையும் கைது செய்தனர். அவர் இறந்தார். இந்த வழக்கில்,தேனி மாவட்ட கூடுதல்அமர்வு நீதிமன்ற நீதிபதிகோபிநாதன், முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். உமர்பாருக் விடுவிக்கப்பட்டார்.