/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீசும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆலோசனை மதியம் வெளியில் செல்லாதீர்கள்
/
வீசும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆலோசனை மதியம் வெளியில் செல்லாதீர்கள்
வீசும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆலோசனை மதியம் வெளியில் செல்லாதீர்கள்
வீசும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆலோசனை மதியம் வெளியில் செல்லாதீர்கள்
ADDED : ஏப் 21, 2024 05:00 AM
கம்பம் : மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பம் நிலவி வருகிறது. இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள், அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சிராசுதீன் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அவர் கூறியதாவது: வெப்ப அலை என்பது சமவெளி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் நிலவுவதால் ஏற்படும்.
தகரங்கள், சிமென்ட் ஓடுகள் உள்ள இடங்களில் இருந்தால் பாதிப்பு அதிகம் ஏற்படும். வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் மின்விசிறிக்கு கீழ் இருந்தாலும் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். இது போன்ற இடங்களில் குளிர் மின்விசிறி, ஏசி பயன்படுத்தி கொள்ளலாம்.
தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் வெண்மை நிறமாக போகும் வரை நீர் அருந்துவது நல்லது.
நீர் மோர், இளநீர், உப்பிட்ட எலுமிச்சை சாறு, உப்பிட்ட நெல்லிக்காய் சாறு , சப்ஜா விதை ஊறல் நீர், வெட்டி வேர் ஊறல் நீர் நன்னாரி சர்பத் அருந்தலாம்.
தர்ப்பூசணியில் சிவப்பு மற்றும் வெள்ளை பகுதியையும் சேர்த்து சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெண்பூசணிக்காய், கொய்யா, மாதுளை, ஆரஞ்சு , ஆப்பிள் சாப்பிடலாம். தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. குளிப்பதற்கு குளிர் தாமரை தைலம், கீழாநெல்லி தைலம் தலையில் தேய்த்து குளிக்கலாம்.
கடலைமாவு பாசிப்பயறு மாவு கலந்து தேய்த்து குளிப்பதால், உடலில் வேர் குரு, வேனல் கொப்புளங்கள் வராமல் தடுக்கலாம். வெப்ப அலையால் தசை செயலிழப்பு, தசைப் பிடிப்பு, வெப்ப மயக்கம் ஏற்படலாம்.
எனவே மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

