/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் வட்டாரத்தில் புகையிலை விற்பனை 'ஜோர்'
/
சின்னமனுார் வட்டாரத்தில் புகையிலை விற்பனை 'ஜோர்'
ADDED : மார் 06, 2025 03:40 AM
சின்னமனூர : சின்னமனூரை சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. உணவு பாதுகாப்பு துறை, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னமனூர் வட்டார கிராமங்களில் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. சீப்பாலக்கோட்டை, ஒடைப்பட்டி, தென்பழநி, காமாட்சிபுரம், எரசை, கன்னிசேர்வைபட்டி , முத்துலாபுரம், மார்க்கையன்கோட்டை குச்சனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கூலி தொழிலாளர்கள் பலரும் குட்கா போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
தோட்ட வேலைகளுக்கு செல்லும் கூலி தொழிலாளிகள் , கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலதரப்பினரும் பான்மசாலா, புகையிலை பயன்படுத்துகின்றனர். சின்னமனூர் கிராமங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஓடைப்பட்டி, சின்னமனூர் போலீசார் குட்கா விற்பனையை தடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். பெயரளவில் ஒரு கிராமத்திற்கு செல்வதும், குறிப்பிட்ட கடைக்கு அபராதம் விதிப்பதும் கண்துடைப்பு நடவடிக்கை. தடுக்க தொடர் நடவடிக்கை தேவை.
பெட்டிக் கடைகளுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். அப்போது தான் குட்கா விற்பனையை தடுக்க முடியும்.