/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புகையிலை விற்ற பழக்கடைகளுக்கு'சீல்': ரூ.75 ஆயிரம் அபராதம்
/
புகையிலை விற்ற பழக்கடைகளுக்கு'சீல்': ரூ.75 ஆயிரம் அபராதம்
புகையிலை விற்ற பழக்கடைகளுக்கு'சீல்': ரூ.75 ஆயிரம் அபராதம்
புகையிலை விற்ற பழக்கடைகளுக்கு'சீல்': ரூ.75 ஆயிரம் அபராதம்
ADDED : ஆக 03, 2024 05:10 AM
தேவதானப்பட்டி: பழக்கடையில் புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சீல் வைத்து, ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன் மற்றும் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ., வேல் மணிகண்டன் ஆகியோர் தேவதானப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். தேவதானப்பட்டி- வைகை அணை ரோடு பகுதியில் ராஜா 60. ராமன் 60.
ஆகியோரது பழக்கடையில் புகையிலை விற்பனைக்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காஜாமைதீன் 60. பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை கைப்பற்றப்பட்டது.
மூன்று கடைகளுக்கும் சீல் வைத்து, தலா ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது.