/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்று பொது வினியோகதிட்ட குறைதீர் முகாம்
/
இன்று பொது வினியோகதிட்ட குறைதீர் முகாம்
ADDED : ஆக 10, 2024 06:42 AM
தேனி : 'உணவுப் பொருள் வழங்கல் துறை குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது,' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பொது வினியோகத் திட்ட குறைபாடுகளை நீக்கி, உடனுக்குடன் தீர்வு காண மாவட்டத்தில் இன்று பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. பெரியகுளத்தில் மதுராபுரி ரேஷன்கடை, தாடிச்சேரி ரேஷன்கடை , ஆண்டிபட்டியில் சண்முகசுந்தரபுரம் ரேஷன்கடை, உத்தமபாளையத்தில் கம்பம் புதுப்பட்டி கூட்டுறவு சங்க வளாகம், போடி டொம்புச்சேரி கூட்டுறவு சங்க வளாகத்திலும் நடக்க உள்ளது. இக்கூட்டங்களில் ஆர்.டி.ஓ., மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கடை மாற்றறத்திற்கு மனு செய்து தீர்வு பெறலாம், என தெரிவித்துள்ளார்.

