/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சின்னமனுார் விழாக்கோலம்
/
சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சின்னமனுார் விழாக்கோலம்
சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சின்னமனுார் விழாக்கோலம்
சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சின்னமனுார் விழாக்கோலம்
ADDED : பிப் 10, 2025 05:06 AM
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் நடக்க உள்ளது.
இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இக்கோயிலில் மட்டும் தான் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கின்றன என்பது தனிச்சிறப்பு. இக்கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் கடந்த 2007ல் நடந்தது. அதற்கு பின் நடக்க வில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் 17 ஆண்டுகளை கடந்தும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. கடந்த 2022ல் எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன், அனைத்து சமுக நிர்வாகிகளை அழைத்து பல முறை கூட்டங்களை நடத்தினார். பின் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி பெற்றுத் தந்தார். அதன்பின் திருப்பணி தலைமை ஒருங்கிணைப்பாளராக துர்காஜ்ரவேல், காயத்ரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விரியன் சாமி உட்பட அனைத்து சமூகத்தினர் அடங்கிய 13 பேர்கள் கொண்ட குழுவினர், செயல் அலுவலர் நதியா ஆகியோர் திருப்பணி வேலைகளை முடித்தனர்.
யாகசாலை பூஜைகள்
கடந்த டிச.8ல் முகூர்த்த கால் ஊன்றப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கியது. கோயில் வளாகத்தில் சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர், முருகன் ஆகியோருக்கு மூன்று பெரிய யாகசாலைகளும், பரிவார தெய்வங்களுக்கு நான்கு வரிசையில் 16 யாக சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பிப்.6 மாலை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து பிப்.7, 8ல் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலை ஐந்தாம் கால யாக பூஜைகள், பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், நாடீ சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
மகாகும்பாபிஷேகம்
இன்று (பிப்.10ல்) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு, காலை 9:15 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின் 9.30 மணிக்கு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர், பரிவார தெய்வங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் பல இடங்களில் நடக்க உள்ளன. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சின்னமனுார் நகர் மட்டும் இல்லாது சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

