/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை தேனியில் 'உங்களுடன் உங்கள் ஊரில்' முகாம்
/
நாளை தேனியில் 'உங்களுடன் உங்கள் ஊரில்' முகாம்
ADDED : ஆக 20, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தின் 3வது புதன்கிழமை, 'உங்களுடன் உங்கள் ஊரில்' முகாம் நடத்தப்படுகிறது.
இதில் கலெக்டர்கள் ஒரு தாலுகாவை தேர்வு செய்து நாள் முழுவதும் தாலுகாவிற்கு உட்பட்ட மருத்துமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வர். மேலும் பொது மக்களிடம் மனுக்களை பெறுவார்கள்.
மாவட்டத்தில் நாளை (ஆக.21ல்) தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது.
அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்கள் மனுக்களை நேரில் வழங்கி தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.