/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட அளவில் முதலிடம் : கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி சாதனை
/
மாவட்ட அளவில் முதலிடம் : கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி சாதனை
மாவட்ட அளவில் முதலிடம் : கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி சாதனை
மாவட்ட அளவில் முதலிடம் : கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 08, 2024 04:45 AM

கம்பம்,: கம்பம் நாகமணியம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தேனி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.
இப்பள்ளியின் மாணவ மாணவிகள் கடந்த 30 ஆண்டுகளாக அரசு பொதுத் தேர்வுகளில் தொடர் சாதனை படைத்து வருகின்றனர். இப்பள்ளி மாணவி ஜெஸ்லின் பாத்திமா, மாணவன் விஷ்ணு பாண்டி ஆகிய இருவர் 600 க்கு 591 மதிப்பெண் பெற்று தேனி மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தனர். பள்ளி அளவில் மாணவி தருணிகா 575 மதிப்பெண்கள் பெற்று 2வது இடமும், மாணவிகள் நீவ்ரித்தி, ரூபிகா ஆகியோர் 572 மதிப்பெண் பெற்று 3வது இடம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற ஜெஸ்லின் பாத்திமா தமிழில் 98, ஆங்கிலத்தில் 97, இயற்பியலில் 100, வேதியியலில் 99, உயிரியலில் 97, கணிதத்தில் 100 மதிப்பெண்களும், விஷ்ணு பாண்டி தமிழில் 96, ஆங்கிலத்தில் 98, இயற்பியலில் 99, வேதியியலில் 100, உயிரியலில் 98, கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
182 மாணவ மாணவிகள் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று, நூறு சதவீத தேர்ச்சி என்ற தொடர் சாதனையை படைத்தனர். 590 க்கு மேல் இருவர், 550 க்கு மேல் 22 பேர், 500 க்கு மேல் 54 பேர்கள் பெற்றுள்ளனர். அக்கவுண்டன்சி 2 பேர், வணிகவியல் 4 பேர், வணிக கணிதம் 2 பேர், இயற்பியல் 3 பேர், கணிதம் 3 பேர், வேதியியல் ஒருவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 பேர், நுாறு சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் காந்தவாசன், இணை செயலர் சுகன்யா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். நிகழ்வில் முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் லோகநாதன், உதவி முதல்வர் சரவணன், யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாளாளர் காந்தவாசன் பேசுகையில், '30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தரமான ஆங்கில கல்வியை தர வேண்டும் என்பதற்காக இப்பள்ளியை எனது தந்தை செல்வகணபதி ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை தடம் புரளாமல் தொடர்ந்து கல்வி பணி செய்து வருகின்றோம்.
தொடர்ந்து மாவட்ட அளவில் முதலிடம், நூறு சதவீத தேர்ச்சி பெற்று எம்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். இதே உத்வேகத்தில் மாணவ மாணவிகள் உயர் கல்வி பயின்று நல்ல பதவிகளுக்கு செல்ல வாழ்த்துகின்றேன்.', என்றார்.

