/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டளை அணையில் 'ஸ்பில்வே' வழியாக தண்ணீர் திறப்பு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ADDED : மே 05, 2024 03:54 AM

மூணாறு, : மூணாறு அருகே குண்டளை அணையில் 'ஸ்பில்வே' வழியாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டதை நூற்றுக் கணக்கில் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.-
மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் உள்ள குண்டளை அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். கேரள மின்வாரியம் அணையை பராமரிக்கின்றது. தற்போது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவு 62 அடி எட்டி நிரம்பி வழிந்தது. அதனால் அணையில் ஸ்பில் வே வழியாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஸ்பில் வே வழியாக பீச்சியடித்த தண்ணீரின் அழகை நூற்றுக் கணக்கில் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த தண்ணீர் மாட்டுபட்டி அணைக்கு வந்து சேர்ந்து தேங்கும். தற்போது மாட்டுபட்டி அணையின் நீர்மட்டம் 128.4 அடியாக உள்ளது. அணையின் உயரம் 162 அடி. குண்டளை அணை திறக்கப்பட்டதால் மாட்டுபட்டி அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. அணையில் 2 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. தவிர அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அணையில் நீர்மட்டம் கணிசமாக உள்ளதால் கோடையில் சிக்கல் இன்றி சுற்றுலா படகுகள் இயங்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.