/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் மழை குறைவால் சுற்றுலா பயணிகள் வருகை
/
இடுக்கியில் மழை குறைவால் சுற்றுலா பயணிகள் வருகை
ADDED : ஆக 08, 2024 05:46 AM

மூணாறு: இடுக்கியில் மழை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வர துவங்கினர்.
இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது வலுவடைந்து பலத்த மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் விடுத்த மழை எச்சரிக்கை, இரவு நேர பயணம், சுற்றுலா பகுதிகள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடு போன்றவற்றால் ஜூன், ஜூலை மாதங்களில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் மழை கொட்டித் தீர்த்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைந்து வெயில் முகம் தென்பட்டது. மழை குறைந்ததால் பயணிகள் வர துவங்கினர்.
மூடல்: மூணாறில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததால் கடந்த ஒரு வாரமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டன. அதேபோல் பல்வேறு சுற்றுலா தொழில்களும் கடந்த ஒருவாரமாக கைவிடப்பட்டன. தற்போது பயணிகள் வரத் துவங்கியதால் நாளை (ஆக.9) சில ஓட்டல்களை திறக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சுதந்திர தினம் நெருங்குவதால் அந்த விடுமுறையில் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.