/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாற்றில் சுற்றுலா பயணிகள் குளியல்
/
முல்லைப்பெரியாற்றில் சுற்றுலா பயணிகள் குளியல்
ADDED : மே 14, 2024 12:38 AM
உத்தமபாளையம்: கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் முல்லைப் பெரியாற்றில் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெப்பம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலையில் மழை பெய்த போதும், காலையில் அதிக வெப்பம் உள்ளது.
வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் அருவிகள், ஆறுகளில் குளிப்பதுண்டு. சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலிற்கு செல்பவர்களும், இங்கு குளித்து விட்டு செல்கின்றனர். கார் நிறுத்த இடம் இருப்பதால் கார்களை நிறுத்தி விட்டு ஆற்றில் இறங்கி குளித்து செல்கின்றனர்.

