/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாட்டுபட்டி அணையில் நீராடிய காட்டு யானைகள்: கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

ADDED : மே 09, 2024 06:11 AM

மூணாறு: மாட்டுபட்டி அணையில் நீண்ட நாட்களுக்கு பின் நான்கு காட்டு யானைகள் நேற்று பகல் முழுவதும் தண்ணீரில் ஆனந்தமாக நீராடியதை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
மூணாறு அருகே மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன.
மாட்டுபட்டியில் உள்ள மாட்டு பண்ணைக்கு தேவையான தீவனத்திற்கு அணையின் கரையோரம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் புல் வளர்க்கப்படுகிறது.
அங்கு வரும் காட்டு யானைகள் தீவனம் நன்கு கிடைக்கும் என்பதால் நாள் கணக்கில் முகாமிடும்.
அவை அவ்வப்போது அணையில் நீர் அருந்த செல்லும். அப்போது சில நேரங்களில் தண்ணீரில் ஆனந்தமாக நீராடும்.இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு ஆண் யானை உள்பட நான்கு காட்டு யானைகள் பகல் முழுவதும் தண்ணீரில் ஆனந்தமாக நீராடின. வெகு நேரத்திற்கு பிறகு இரண்டு பெண் யானைகள் தண்ணீரில் நீந்தி மறு கரைக்குச் சென்றன.
யானைகள் நீராடியதை படகில் பயணித்தவாறு சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.