/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடும் வெப்பத்திலும் தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
கடும் வெப்பத்திலும் தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணியர்
கடும் வெப்பத்திலும் தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணியர்
கடும் வெப்பத்திலும் தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : மே 01, 2024 08:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:தேக்கடி வனப்பகுதியில் நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டமும் 115 அடியாக குறைந்தது. அப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் நான்கு மாதங்களாக சுற்றுலா பயணியர் வருகை குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் லோக்சபா தேர்தல் முடிந்தது. பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தேக்கடி ஏரியில், படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.