/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிப்பறை வசதி இன்றி சுற்றுலா பயணிகள் அவதி
/
கழிப்பறை வசதி இன்றி சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : மே 07, 2024 06:10 AM

மூணாறு: மூணாறில் போதிய அளவில் கழிப்பறை வசதி இன்றி சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி பொது மக்களும் அவதியுற்று வருகின்றனர்.
சுற்றுலா நகரான மூணாறில் நான்கு கட்டண கழிப்பறைகள் உள்ளன. இருப்பினும் இலவச கழிப்பறை வசதி இல்லாததால் நகரில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி சார்பில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட், மாட்டுபட்டி ரோடு, தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் மற்றும் தபால் அலுவலகம் ஜங்ஷன்கள் ஆகிய பகுதிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் நவீன முறையில் இலவச ' மாடுலர் டாய்லட்' கள் கடந்த ஆகஸ்ட்டில் அமைக்கப்பட்டன. அவற்றில் தபால் அலுவலகம் ஜங்ஷன், மாட்டுபட்டி ரோடு ஆகிய பகுதிகளில் கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வந்தன. தற்போது கோடை சுற்றுலா சீசன் துவங்கியதால் பயணிகள் வருகை அதிகரித்தது. அதற்கு ஏற்ப நகரில் போதிய அளவில் கழிப்பறை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி பொது மக்களும் அவதியுற்று வருகின்றனர்.
கழிப்பறைகளை திறக்க ஊராட்சி நிர்வாகம் தயாராக வேண்டும் என கோரிக்கை எழுந்தது.