/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் பந்தல்களால் களைகட்டும் தென்னங்கிடுகு வியாபாரம்
/
தேர்தல் பந்தல்களால் களைகட்டும் தென்னங்கிடுகு வியாபாரம்
தேர்தல் பந்தல்களால் களைகட்டும் தென்னங்கிடுகு வியாபாரம்
தேர்தல் பந்தல்களால் களைகட்டும் தென்னங்கிடுகு வியாபாரம்
ADDED : ஏப் 01, 2024 11:56 PM

பெரியகுளம்: கோடையுடன் தேர்தல் திருவிழா, கோயில்திருவிழா காலம் என்பதால் தென்னங்கிடுகு வியாபாரம் களை கட்டியுள்ளது.
பெரியகுளம் தாலுகாவில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தென்னை மரத்தில் இருந்து தென்னங் கிடுகுகள் கிடைக்கிறது. இதனால் இப் பகுதியில் ஆண்டு முழுவதும் தென்னங்கிடுகு பின்னி விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலில் நுாற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். நிழல் பந்தல், பங்குனி திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள், கட்சி தேர்தல் அலுவலகம், கேரளாவிற்கு கோழிப்பண்ணை என பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்க தென்னங்கிடுகுகள் அதிக அளவில் தேவைப்படுகிறது.
தென்னங்கிடுகு மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைகாலங்களில் தென்னங்கிடுகுகள் தேவை அதிகரிக்கும். இவை வெயிலை தாங்கி குளிர்ச்சியை ஏற்படுத்தும். தென்னங்கிடுகு பந்தல், நிரந்தர மேற்கூரை அமைப்பதால் எப்போதும் குளுகுளு என இருக்கும்.
கிடுகு வியாபாரி மணி கூறுகையில், 50 கிடுகுகள் ரூ.250 விலையில் உள்ளது.
தேர்தலை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பந்தல், சைடு பந்தல் அமைப்பதற்கு தமிழகம், கேரளாவிற்கு தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கிடுகள் விற்பனையாகிறது. வெயில் அதிகரிப்பால் தென்னங்குடுகள் தேவை அதிகரிக்கிறது. இதனால் விற்பனை களை கட்டி உள்ளது.
எதிர்பார்த்ததை விட வியாபாரம் நன்றாக உள்ளது என்றார்.

