/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்கள் பொதுமக்கள், நோயாளிகள் அவதி

ADDED : மே 07, 2024 06:00 AM

தேனி: தேனி - மதுரை ரோட்டில் இரயில்வே கேட் பகுதியில் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலால் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஆம்புலன்ஸ், பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
தேனி - மதுரை ரோட்டில் அரண்மனைப்புதார் விலக்கில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இந்த வழியாக ரயில் செல்லும் போது போக்கு வரத்து நெரிசல் காலை, மாலையில் தொடர்கதையாக உள்ளது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்துவர்.
ஆனால் நேற்று காலை 9:30 மணி அளவில் மதுரை - போடி ரயில் இவ்வழியாக கடந்து சென்றது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசலால் பங்களாமேடு, புது பஸ் ஸ்டாண்ட், சிப்காட் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கடும் போக்குவரத்து நெரிசலால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கம்பம், போடி சென்ற பஸ்கள் சிவாஜிநகர், பாரஸ்ரோடு வழியாக இயக்கப்பட்டன. இந்த நிலை மதியம் 12:00 மணி வரை இதே நிலை நீடித்தது.
நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வழிகிடைக்காமல் காத்திருந்து மருத்துவக்கல்லுாரிக்கு சென்றது.
போலீசார் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள போலீசார் பலர் வீரபாண்டி சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக கூறினர்.