/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாரச்சந்தை நாளில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; உத்தமபாளையத்தில் மக்கள் அவதி

ADDED : ஜூலை 24, 2024 05:49 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் வாரச்சந்தை நாளில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தமபாளையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாரச்சந்தை துவக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இருந்து பைபாஸ் வரை ரோட்டில் மேற்கு பக்கம் சந்தை ஆரம்பித்தனர்.
இப்போது ரோட்டின் ஓரத்தில் வியாபாரிகள் உட்கார்ந்து விட்டனர். வாரச் சந்தை கூடும் நாளில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மதியம் முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.
சந்தைக்கு வருவோர் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கில் டூவீலர்கள் நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால் பஸ்கள், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்.
கட்டணத்தை வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. ஒன்று வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
அல்லது போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.