/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் நிரந்தர கல்வி எண் பதிவு அமல் கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

ADDED : மே 29, 2024 09:01 PM
தேனி:தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான நிரந்தர கல்வி எண்(Permenent Education Number) இந்தாண்டு முதல் அமல்படுத்த கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பற்றி விபரங்கள் அறிய எமிஸ்(Education Management information System) பின்பற்றப்படுகிறது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், முகவரி, ஆதார் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிற மாநிலங்களில் வெவ்வேறு முறைகள் பின்பற்ற படுகின்றன. அனைத்து மாநிலங்களிலும் பள்ளி பயிலும் மாணவர்களின் தகவல்களை தேசிய கல்வி அமைச்சகம் சார்பில் ' யூடிஸ் பிளஸ்' என்ற தளத்தில் பதிவேற்றி ஒருங்கிணைப்பதற்கான பணிகள் நடக்கிறது.
இதில் ஒவ்வொரு மாணவருக்கும் நிரந்தர கல்வி எண் வழங்கப்படும். அதே போல் பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள வசதிகள் பற்றிய விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். தமிழகத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு தேசிய அளவிலான நிரந்தர கல்வி எண் வழங்க கல்வித்துறை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையினர் கூறுகையில் 'யூடிஸ் பிளஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து மாவட்ட, வட்டார அளவில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு மாணவர் ஒரு மாநிலத்தில் கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு வேறு மாநிலத்தில் படித்தாலும் அதனை தேசிய பதிவு எண் மூலம் உறுதி செய்யலாம். தேசிய அளவில் பள்ளி மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கான கல்வி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த உதவியாக இருக்கும் என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது' என்றனர்.