/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உயர்கல்வி வழிகாட்டி குழுக்களுக்கு பயிற்சி
/
உயர்கல்வி வழிகாட்டி குழுக்களுக்கு பயிற்சி
ADDED : மே 10, 2024 05:30 AM
தேனி: அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டு குழுக்களுக்கான பயிற்சிகள் நிறைவடைந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இங்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் கல்லுாரிகளில் சேரவும், தேர்ச்சி பெறாத மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க, தொழிற்கல்வியில் சேர்வதற்கு உதவி செய்ய அனைத்துப்பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர், துணைத்தலைவர், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் என 7 முதல் 13 பேர்வரை இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வட்டாரம் வாரியாக பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல், கல்லுாரி செல்வதற்கு பொருளாதா தடை உள்ள மாணவர்கள் பற்றி தெரிவித்தல், கல்லுாரிகளில் உள்ள பாடபிரிவுகள், வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.