ADDED : ஆக 01, 2024 05:44 AM
உத்தமபாளையம்: தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் பணியை மேம்படுத்தும் பணிமனை உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், பாடங்களை எளிமையாக மாணவர்களுக்கு புரியும்படி கற்பிக்க வழிமுறைகளை ஆய்வு மூலம் தயார் செய்தனர். தயாரிக்கப்பட்ட செயல் ஆய்வுகளை ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. இதில் புதுமையான கற்பித்தல் முறைகள், ஆராய்ச்சியின் செயல்பாடுகள், முடிவுகளை விளக்கினர்.
பணியிடை பயிற்சி துறை தலைவர் பிரபு, முதல்வர் ராஜேஸ்வரி, செயல் ஆய்வு,அதன் முக்கியத்துவம் பற்றியும், வகுப்பறையில் கற்றல் - கற்பித்தலில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள் தீர்வு கண்டு, கற்றல் திறன் மேம்படுத்த ஆலோசனை வழங்கினர்.
துணை முதல்வர் கீதா ராணி , விரிவுரையாளர் நாகஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள்.