ADDED : ஆக 03, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், சமூக நல அலுவலர் சியாமளாதேவி முன்னிலை வகித்தனர். முகாமில் வீட்டு மனை, கல்விக்கடன், ஆதார் அட்டை, சுய தொழில் துவங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்துத்தர கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டன. விரைவில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட சமூக நலத்துறை அலுவலரை கலெக்டர் அறிவுறுத்தினார்.