/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ்சில் குடையுடன் பயணம் மழைநீர் ஒழுகும் அவலம் அதிகாரி கப்சிப்
/
அரசு பஸ்சில் குடையுடன் பயணம் மழைநீர் ஒழுகும் அவலம் அதிகாரி கப்சிப்
அரசு பஸ்சில் குடையுடன் பயணம் மழைநீர் ஒழுகும் அவலம் அதிகாரி கப்சிப்
அரசு பஸ்சில் குடையுடன் பயணம் மழைநீர் ஒழுகும் அவலம் அதிகாரி கப்சிப்
ADDED : மே 14, 2024 09:10 AM

தேனி : தேனி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்குள் மழை கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தும் பலர் நனைத்தபடியும் பயணித்தனர்.
போடி அரசுபஸ் டெப்போவிற்கு சொந்தமான (TN 57 N 2226) அரசு பஸ் நேற்று மதியம் 3:00 மணிக்கு கம்பத்திலிருந்து தேனி வழியாக மதுரைக்கு புறப்பட்டது.
பஸ் மதியம் 3:25 மணிக்கு சின்னமனுார் வந்தது. பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கோட்டூர், சிலையம்பட்டி பகுதியில் வந்த போது கனமழை பெய்தது. பஸ்சின் மேற்கூரை ஓட்டை உடைசலாகி சேதமடைந்திருந்ததால் மழைநீர் பஸ்சிற்குள் கொட்டியது. இதனால் பயணிகள் நனைந்தபடி பயணித்தனர்.
சீட்களில் அமர்ந்திருந்தவர்களும் நின்று கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. சிலர் குடைபிடித்தவாறு பயணித்தனர். இது குறித்து டெப்போ மேனேஜர் பாண்டியராஜனை தொடர்பு கொண்ட போது பதிலளிக்க மறுத்து விட்டார்.
மாவட்டத்தில் பல பஸ்கள் இதே நிலையில் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.