/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி கோயில் திருவிழாவில் கேமராக்கள் பொருத்துவதில் சிக்கல்
/
வீரபாண்டி கோயில் திருவிழாவில் கேமராக்கள் பொருத்துவதில் சிக்கல்
வீரபாண்டி கோயில் திருவிழாவில் கேமராக்கள் பொருத்துவதில் சிக்கல்
வீரபாண்டி கோயில் திருவிழாவில் கேமராக்கள் பொருத்துவதில் சிக்கல்
ADDED : மே 06, 2024 12:41 AM
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்குகிறது. திருவிழாவில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேமராக்கள் முழுமையாக பொருத்தாததால், கண்காணிப்பு பணியில் சிக்கல் எழுந்துள்ளது.
இக்கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காகவும், கண்காணிப்பு பணிக்காகவும் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்தாண்டு ஆலோசனைக் கூட்டத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் அதிக அளவில் கேமராக்கள் பொருத்துவதாக முடிவு செய்யப்பட்டன.
அதனை போலீசார் கண்காணிக்க உள்ளனர். பக்தர்கள் அதிகம் கூடும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், ராட்டின மைதானம், ஆற்றங்கரை ஆகிய பகுதியில் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
திருவிழா நாளை துவங்க உள்ள நிலையில் கேமராக்கள் பொருத்தும் பணி முழுமை பெறவில்லை. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.கேமராக்கள் பொருத்தும் பணி பற்றி அலைபேசியில் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்துவை தொடர்பு கொண்ட போது, அவர் பதிலளிக்க வில்லை. அதே சமயம் போலீசார் சார்பில் முகங்களை ஸ்கேன் செய்யும் கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட உள்ளன.