ADDED : ஜூன் 01, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 52. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக டூவீலரில் 26 மது பாட்டில்களை கடத்தி வந்துள்ளார்.
இது போல போடி கீழவெளி வீதியை சேர்ந்தவர் முனியாண்டி 41. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்களை பதுக்கி வைத்திருந்தார்.
போடி டவுன் தங்கப்பாண்டி, முனியாண்டி இருவரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 34 மது பாட்டில்கள், டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.