/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லாரியில் கஞ்சா கடத்திய இருவர் கைது
/
லாரியில் கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : ஆக 09, 2024 12:32 AM
மூணாறு: தமிழகத்தில் இருந்து போடிமெட்டு வழியாக தினமும் ஏராளமான லாரிகளில் ஜல்லிகற்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்படுகின்றது.
அவ்வாறு வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை பூப்பாறையில் மறித்து இடுக்கி கலால்துறை உதவி இன்ஸ்பெக்டர்கள் திலிப் , அஷ்ரப் ஆகியோர் சோதனையிட்டனர். அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பத்து கிலோ கஞ்சா சிக்கியது. அதனை லாரியில் கடத்தி வந்த ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த அபிஜித் 31, அனீஷ் 49, ஆகியோரை கைது செய்தனர். அடிமாலி மாங்கடவு பகுதியைச் சேர்ந்த ஷைமோன்தாமஸ் தப்பி ஓடிவிட்டார். இவர்கள் மூவரும் கஞ்சா கடத்தியது தொடர்பாக பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.