ADDED : ஆக 16, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு நெல்லி மலை தேயிலை தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வண்டிப்பெரியாறு பசுமலையைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் 32, ஜோமோன் 37.
இவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 8 கிலோ சந்தன கட்டைகளை ரேஞ்சர் அனில்குமார் தலைமையிலான வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள மோப்பநாய் உதவியுடன் இவர்களை வண்டிப்பெரியாறில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.