போடி: போடி வெண்ணிமலை தெருவை சேர்ந்த லோடுமேன் ஜெகதீசன் 27. இவரது மனைவி சோபியா. காதல் திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மனம் உடைந்த ஜெகதீஸ்வரன் நேற்று முன் தினம் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
போடி வலசத்துறை ரோட்டில் வசித்தவர் சிவரஞ்சனி 29. இவரது கணவர் சுரேஷ்குமார் 32. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமார் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் சிவரஞ்சனி வீட்டில் தூக்கிட்டு உள்ளார். சிவரஞ்சனியை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
இரு சம்பவம் குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.