/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி இருவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி இருவர் கைது
ADDED : மார் 30, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி, : பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் சரவணன் 50. ஓட்டலில் சாப்பிட சென்றார். இவரை இதே ஊர் ஹாஸ்டல் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 24. இவரது நண்பர்கள் சுரேந்தர் 23. லிங்கேஸ்வரன் 21.
மூவரும் கத்தியை காட்டி சரவணனிடம் பணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் கீழே தள்ளி சட்டை பையில் இருந்த ரூ.ஆயிரத்தை பறித்து வழிப்பறி செய்தனர். ஜெயமங்கலம் எஸ்.ஐ.,முருகப்பெருமாள், சூரியபிராஷ், சுரேந்தரை கைது செய்து தப்பியோடிய லிங்கேஸ்வரனை தேடி வருகின்றனர்.-

