ADDED : செப் 12, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அருகே பூதிப் புரம் சந்திரசேகரன் 63. இவரது தம்பி பீட்டர் 58. இருவரும் பூதிபுரம் ராஜபூபால கண்மாயில் மீன் குத்தகை எடுத்து தொழில் செய்து வந்தனர்.
டூவீலரில் பெரியகுளம் சென்று பூதிப்புரம் திரும்பினர். அப்போது திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோடு தனியார் மில் அருகே வரும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட்டு இடது புறம் திரும்பும்போது ரோட்டில் உள்ள இரும்பு பேரி கார்டில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரை ஓட்டிய பீட்டர் காயமடைந்தார்.தேனி மருத்துவக்கல்லுாரியில் முதலுதவி அளித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

